புதன்கிழமை விரதம் பொதுவாக மகாவிஷ்ணுவுக்காக மேற்கொள்வது. அந்த நாளில் விநாயகருக்கு விரதமிருப்பதும் நற்பலன் தரும்.

Advertisment

வாத நோய், பித்தம், புத்தி மந்தம், தொண்டையில் நோய், மஞ்சள் காமாலையால் பாதிப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கு, தோல் நோய், திக்குவாய் பிரச்சினை, ஆறாத ரணம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் புதன்கிழமை விரதம் மேற்கொள்வது நல்லது.

fasting

எழுத்தாளர்கள், அச்சகம் வைத்திருப்பவர்கள், செய்தித் தாள் உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவாளிகள், சுயமுயற்சியால் முன்னுக்கு வருபவர்கள், வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், தரகர்கள், ஸ்டேஷனரி கடை வைத்திருப்பவர்கள், மெக்கானிக்குகள், பொறியியல் வல்லுநர்கள், மனநோய் மருத்துவர்கள், கணக்காளர்கள், விளையாட்டு வீரர்கள்- இவர்கள் புதன்கிழமை விரதம் கடைப்பிடித்தால் மேலும் உயரலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் 6, 8, 12-ல் அஸ்தமனமாக இருந்து, அத்துடன் இன்னொரு பாவகிரகம் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் சந்தோஷம் குறையும். நோய்கள் இருக்கும். மனதில் அமைதி இருக்காது. சிலருக்கு தோல் நோய் இருக்கும்.

புதன், சனியுடன் சேர்ந்து 7-ல் இருந்தால், அவரது உடலில் ஆண்மைத் தன்மை குறைவாக இருக்கும். தைரியம் குறையும். தான் செய்வது வெற்றி பெறுமா அல்லது தோல்வியில் முடியுமா என்ற பயத்துடன் எப்போதும் இருப்பார்.

புதன், செவ்வாயுடன் சேர்ந்து 2-ல் இருந்தால், அவருக்கு இளமையில் படிப் பில் பிரச்சினைகள் ஏற்படும். அதே புதன், செவ்வாயுடன் 5 அல்லது 12-ல் இருந்தால், அவருக்கு அதிகமாக கோபம் வரும். உடலில் சிறிய சிறிய நோய்கள் இருக்கும்.

செவ்வாய், புதன், சந்திரன் 12-ல் இருந்தால், அவர் வாகனம் ஓட்டிச் செல்லும் போது சிறிதும் எதிர்பாராமல் யாராவது வந்து மோது வார்கள்.

செவ்வாய், சந்திரன், சனி 12-ல் இருந்து, 6-ல் இருக்கும் புதனால் பார்க்கப்பட்டால், அவருக்கு தோல் நோய் இருக்கும். கரும்புள்ளிகள், நமைச்சல் இருக்கும்.

ஜாதகத்தில் புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்து, 12-ல் செவ்வாய், சூரியன் இருந்தால் அவர் திறமைசாலியாக இருந்தும், படிப்பை முடிப்பதற்கு சிரமப்படுவார். சிலருக்கு நண்பர்கள் சரியாக இல்லாமல், இவர்களின் வாழ்க்கையைக் கெடுத்து விடுவார்கள்.

புதன், சுக்கிரன், சந்திரன் 2-ஆம் பாவத்தில் இருந்து, அவர் இளம் வயதில் படிக்கும் காலத்தில் ராகு தசை நடந்திருந்தால், அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், காதல் வலையில் சிக்கிக்கொள்வார். அதனால் படிப்பு விஷயத் தில் பிரச்சினைகள் உண்டாகும். கும்பத்தில் பல சிக்கல்கள் உண்டாகும்.

சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், நன்றாகப் படிக்கும் குழந்தைகள் பெற்றோர் வருந்தும் அளவுக்கு சில செயல்களைச் செய்வார்கள். சிலருக்கு பித்தநோய் வரும். சிலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். சிலருக்கு கெட்ட நண்பர்கள் வாய்ப்பார்கள்.

லக்னத்தில் புதன் அஸ்தமனமாக இருந் தால், அந்த புதன் லக்னாதிபதியாகவும் இருந்தால், அவர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், தன் திறமையை வெளிப்படுத்து வதற்கு மிகவும் சிரமப்படுவார். பல விஷயங் களைத் தெரிந்து வைத்திருந்தாலும் அதைத் கூறுவதற்கும், எழுதுவதற்கும் இயலாமல் இருப்பார். தைரியமின்மை காரணமாக பல பெரிய வாய்ப்புகளை இழந்துவிடுவார்.

லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 2-ஆம் பாவம் கெட்டுப் போயிருந்தால், அவருடைய காரியங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களே தடைகளைஉண்டாக்கு வார்கள்.

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, புதனும் அஸ்தமனமாக இருந்து, அந்த புதனை பாவகிரகங்கள் பார்த்தால், அவர் செய்யும் வர்த்தகத்தில் லாபம் வரும் நேரத்தில் ஏதாவது தடைகள் உண்டாகும். அவருடைய அக்காள், தங்கை, அத்தை ஆகியோருடன் அவருக்கு சரியான உறவிருக்காது.

ஒரு ஜாதகத்தில் புதன் சரியில்லை யென்றால், அவருக்கு பல் நோய் இருக்கும். திறமை வாய்ந்த நீதிபதியானாலும் தீர்ப்பை எழுதும் நேரத்தில் குழப்பமடைவார்.

பரிகாரங்கள்

வளர்பிறையின் முதல் புதன்கிழமையன்று காலையில் குளித்து முடித்து, விநாயகருக்கு தீபமேற்றி, வாழைப்பழம், தேங்காய், பூ ஆகிய வற்றை வைத்து பூஜை செய்யவேண்டும். இதை 21-லிருந்து 45 வாரங்கள் வரை செய்யலாம்.

அந்த நாளன்று விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அவரை நான்குமுறை சுற்றிவர வேண்டும். வெளிர்நிற ஆடைகளையே அணிய வேண்டும். "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோ ஷ... புதாய நமஹ' என்ற மந்திரத்தைக் குறைந்தபட்சம் 108 முறை கூறவேண்டும். மனதில் நினைத்த வாரங்களில் முழுமையாக விரதமிருந்து முடித்தபிறகு, விநாயகருக்கு பிரசாதம் படைக்க வேண்டும். பசுவுக்கு உணவளிக்கவேண்டும். குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்குதல் நன்று.

செல்: 98401 11534